குர்ஆன் 61:7 — அணிவகுப்பு
அடிபணிதலின் பால் அழைக்கப்பட்டவனாக அவன் இருக்கின்ற நிலையில், கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? பாவி களான மக்களைக் கடவுள் வழி நடத்து வதில்லை.
[61:6] மேரியின் மகனான, இயேசு, “இஸ்ரவேலின் சந்ததியினரே, தோராவை உறுதிப்படுத்து கின்றவராகவும், மேலும் எனக்குப் பின்னர் வர இருக்கின்ற இன்னும் அதிகம் பாராட்டப்பட்ட தாக இருக்கும் (அஹ்மத்) என்ற பெயருடைய ஒரு தூதரைக் குறித்த நற்செய்தியைக் கொண்டு வந்திருப்பவருமாகிய நான், உங்களுக்குக் கடவுள்-ன் தூதர் ஆவேன்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. பின்னர், தெளிவான சான்றுகளை அவர்களிடம் அவர் காட்டிய போது, அவர்கள், “இது ஆழ்ந்த மாயாஜாலமாகும்” என்று கூறினார்கள்.
[61:8] கடவுள்-ன் ஒளியைத் தங்களுடைய வாய் களைக் கொண்டு அணைத்து விட அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நம்ப மறுப்பவர்கள் வெறுத்த போதிலும், தன்னுடைய ஒளியைப் பூரணப்படுத்துவதில் கடவுள் உறுதியுடனிருக் கின்றார்.