Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 62:8 — வெள்ளிக்கிழ

“நீங்கள் தவிர்த்து விட விரும்புகின்ற அந்த மரணமானது, விரைவிலோ அல்லது தாமதமாக வோ உங்களைத் தொடர்ந்து வந்து பிடித்து விடும். பின்னர் நீங்கள் அனைத்து இரகசியங் களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்த வரிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்” என்று கூறுவீராக.

[62:7] அவர்கள் செய்தவற்றின் காரணத்தால், அவர் கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள். கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்திருக் கின்றார்.

[62:9] நம்பிக்கை கொண்டோரே, வெள்ளிக்கிழமை அன்று கூட்டுத்தொழுகை (ஸலாத் அல்-ஜுமுஆ) அறிவிக்கப்படும் பொழுது, கடவுள்-ஐ நினைவு கூர்வதற்காக நீங்கள் விரைந்து செல்லவும், மேலும் வேலைகள் அனைத்தையும் விட்டு விடவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்.