குர்ஆன் 63:9 — நயவஞ்சகர்க
நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய பணத் தாலும் மற்றும் உங்களுடைய பிள்ளைகளாலும் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். இவ்வாறு செய்பவர்கள் நஷ்டவாளிகள்ஆவார்கள்.
[63:8] அவர்கள், “நகருக்குள் நாம் திரும்பிச் சென்றால், அங்குள்ள சக்தி வாய்ந்தவர்கள் பலஹீனர்களை வெளியேற்றி விடுவார்கள் (மேலும் நாம் மோசம் போய் விடுவோம்)” என்று கூறுகின்றனர். கண்ணியம் அனைத்தும் கடவுள்-க்கும் அவரு டைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்குமே உரியது (என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்). ஆயினும் இந்நயவஞ்சகர்கள் அறிந்து கொள்வதில்லை.
[63:10] மரணம் உங்களிடம் வருவதற்கு முன்னர், உங்களுக்குரிய நம்முடைய வாழ்வாதாரங் களிலிருந்து நீங்கள் கொடுக்க வேண்டும், பின்னர் நீங்கள், “என் இரட்சகரே, சிறியதொரு காலம் மட்டும் இதனை நீர் தாமதப்படுத்தினால்! அப்போது நான் தர்மம் செய்பவனாகி, மேலும் நன்னெறியாளர்களுடன் சேர்ந்து கொள்வேன்!” என்று கூறுவீர்கள்.