Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 63:8 — நயவஞ்சகர்க

அவர்கள், “நகருக்குள் நாம் திரும்பிச் சென்றால், அங்குள்ள சக்தி வாய்ந்தவர்கள் பலஹீனர்களை வெளியேற்றி விடுவார்கள் (மேலும் நாம் மோசம் போய் விடுவோம்)” என்று கூறுகின்றனர். கண்ணியம் அனைத்தும் கடவுள்-க்கும் அவரு டைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்குமே உரியது (என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்). ஆயினும் இந்நயவஞ்சகர்கள் அறிந்து கொள்வதில்லை.

[63:7] “கடவுள்-ன் தூதரைப் பின்பற்றியவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்காதீர்கள், ஒரு வேளை அவர்கள் அவரைக் கைவிட்டு விடக்கூடும்!,” என்று கூறுபவர்கள் தான் அவர்கள். ஆயினும், வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்களைக் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார், ஆனால் இந்நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.

[63:9] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய பணத் தாலும் மற்றும் உங்களுடைய பிள்ளைகளாலும் கடவுள்-ஐ நினைவு கூர்வதிலிருந்து கவனம் திருப்பப்பட்டு விடாதீர்கள். இவ்வாறு செய்பவர்கள் நஷ்டவாளிகள்ஆவார்கள்.