குர்ஆன் 63:7 — நயவஞ்சகர்க
“கடவுள்-ன் தூதரைப் பின்பற்றியவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்காதீர்கள், ஒரு வேளை அவர்கள் அவரைக் கைவிட்டு விடக்கூடும்!,” என்று கூறுபவர்கள் தான் அவர்கள். ஆயினும், வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்களைக் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார், ஆனால் இந்நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.
[63:6] அவர்களுடைய பாவமன்னிப்பிற்காக நீர் பிரார்த்தித்தாலும், அல்லது அவர்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்திக்கா விட்டாலும், அவர்களுக்கு அது சமமேயாகும்; கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.
[63:8] அவர்கள், “நகருக்குள் நாம் திரும்பிச் சென்றால், அங்குள்ள சக்தி வாய்ந்தவர்கள் பலஹீனர்களை வெளியேற்றி விடுவார்கள் (மேலும் நாம் மோசம் போய் விடுவோம்)” என்று கூறுகின்றனர். கண்ணியம் அனைத்தும் கடவுள்-க்கும் அவரு டைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்குமே உரியது (என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்). ஆயினும் இந்நயவஞ்சகர்கள் அறிந்து கொள்வதில்லை.