குர்ஆன் 63:6 — நயவஞ்சகர்க
அவர்களுடைய பாவமன்னிப்பிற்காக நீர் பிரார்த்தித்தாலும், அல்லது அவர்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்திக்கா விட்டாலும், அவர்களுக்கு அது சமமேயாகும்; கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.
[63:5] “வாருங்கள், கடவுள்-ன் தூதர் உங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்ய ட்டும்”, என அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் பரிகாசமாகத் தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர், மேலும் அவர்கள் மற்றவர்களை விரட்டுவதையும் மேலும் ஆணவத்துடன் நடந்து கொள்வதையும் நீர் காண்பீர்.
[63:7] “கடவுள்-ன் தூதரைப் பின்பற்றியவர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்காதீர்கள், ஒரு வேளை அவர்கள் அவரைக் கைவிட்டு விடக்கூடும்!,” என்று கூறுபவர்கள் தான் அவர்கள். ஆயினும், வானங்கள் மற்றும் பூமியின் பொக்கிஷங்களைக் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார், ஆனால் இந்நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.