Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 63:5 — நயவஞ்சகர்க

“வாருங்கள், கடவுள்-ன் தூதர் உங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்ய ட்டும்”, என அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் பரிகாசமாகத் தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர், மேலும் அவர்கள் மற்றவர்களை விரட்டுவதையும் மேலும் ஆணவத்துடன் நடந்து கொள்வதையும் நீர் காண்பீர்.

[63:4] அவர்களை நீர் காணும் பொழுது, அவர்களுடைய தோற்றங்களால் நீர் கவரப்படக் கூடும். மேலும் அவர்கள் பேசும் பொழுது, அவர்களுடைய சொல்வன்மையை நீர் கவனத்துடன் செவியேற்கக் கூடும். அவர்கள் நிற்கின்ற மரக் கட்டைகளைப் போன்றவர்கள். ஒவ்வொரு அழைப்பும் அவர்க ளுக்கு எதிரான நோக்கத்தில் உள்ளதென்றே அவர்கள் நினைக்கின்றனர். இவர்கள்தான் மெய்யான விரோதிகள் ஆவர்; அவர்களைக் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பீராக. கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார்; அவர்கள் விலகிச் சென்று விட்டனர்.

[63:6] அவர்களுடைய பாவமன்னிப்பிற்காக நீர் பிரார்த்தித்தாலும், அல்லது அவர்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்திக்கா விட்டாலும், அவர்களுக்கு அது சமமேயாகும்; கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். ஏனெனில் கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.