Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 65:6 — விவாகரத்து

أَسكِنوهُنَّ مِن حَيثُ سَكَنتُم مِن وُجدِكُم وَلا تُضارّوهُنَّ لِتُضَيِّقوا عَلَيهِنَّ ۚ وَإِن كُنَّ أُولٰتِ حَملٍ فَأَنفِقوا عَلَيهِنَّ حَتّىٰ يَضَعنَ حَملَهُنَّ ۚ فَإِن أَرضَعنَ لَكُم فَـٔاتوهُنَّ أُجورَهُنَّ ۖ وَأتَمِروا بَينَكُم بِمَعروفٍ ۖ وَإِن تَعاسَرتُم فَسَتُرضِعُ لَهُ أُخرىٰ

உங்களுடன் அவர்கள் வசித்து வந்த அதே வீட்டில் அவர்கள் வசிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும், மேலும் அவர்களாகவே வெளியேறி விடும்படி வாழ்க்கையை அவர்களுக்கு மிகவும் துன்பகர மானதாக ஆக்கி விடாதீர்கள். அவர்கள் கர்ப்பமாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும். அக்குழந்தைக்கு அவர்கள் பாலூட்டினால், அவர்களுடைய இந்தப் பணிக்கென நீங்கள் ஊதியமளிக்க வேண்டும். உங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும். நீங்கள் மனவேற்றுமை கொண்டால், குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக மற்றொரு பெண்ணை நீங்கள் பணிக்கமர்த்திக் கொள்ளலாம்.

[65:5] இது, அவர் உங்களுக்கு இறக்கியனுப்புகின்ற கடவுள்-ன் கட்டளையாகும். எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்கின்றார், மேலும் தாராளமாக அவருக்கு வெகுமதியளிக்கின்றார்.

[65:7] செல்வந்தரான கணவர் தன்னுடைய வருவாய்க் கேற்ப ஆதரவு வழங்க வேண்டும், மேலும் ஏழ்மையானவர் கடவுள் அவருக்கு அளித்த வருவாய்க்கேற்ப வழங்கிட வேண்டும். கடவுள் எந்த ஆன்மாவின் மீதும், அவர் அதற்கு கொடுத்திருப்பதைவிடவும் அதிகமாக சுமத்துவ தில்லை. கஷ்டத்திற்குப் பின்னர் எளிதானதை கடவுள் வழங்குவார்.