குர்ஆன் 65:7 — விவாகரத்து
செல்வந்தரான கணவர் தன்னுடைய வருவாய்க் கேற்ப ஆதரவு வழங்க வேண்டும், மேலும் ஏழ்மையானவர் கடவுள் அவருக்கு அளித்த வருவாய்க்கேற்ப வழங்கிட வேண்டும். கடவுள் எந்த ஆன்மாவின் மீதும், அவர் அதற்கு கொடுத்திருப்பதைவிடவும் அதிகமாக சுமத்துவ தில்லை. கஷ்டத்திற்குப் பின்னர் எளிதானதை கடவுள் வழங்குவார்.
[65:6] உங்களுடன் அவர்கள் வசித்து வந்த அதே வீட்டில் அவர்கள் வசிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும், மேலும் அவர்களாகவே வெளியேறி விடும்படி வாழ்க்கையை அவர்களுக்கு மிகவும் துன்பகர மானதாக ஆக்கி விடாதீர்கள். அவர்கள் கர்ப்பமாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும். அக்குழந்தைக்கு அவர்கள் பாலூட்டினால், அவர்களுடைய இந்தப் பணிக்கென நீங்கள் ஊதியமளிக்க வேண்டும். உங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும். நீங்கள் மனவேற்றுமை கொண்டால், குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக மற்றொரு பெண்ணை நீங்கள் பணிக்கமர்த்திக் கொள்ளலாம்.
[65:8] பல சமூகம் அதனுடைய இரட்சகரின் கட்டளை களுக்கெதிராகவும் மேலும் அவருடைய தூதர் களுக்கெதிராகவும் கலகம் செய்தன. அதன் விளைவாக, கண்டிப்புடன் அவர்களை நாம் பொறுப்பாக்கிப்பிடித்தோம், மேலும் பயங்கரமான தொரு கைம்மாறால் அவர்களைப் பழி தீர்த்தோம்.