குர்ஆன் 65:5 — விவாகரத்து
இது, அவர் உங்களுக்கு இறக்கியனுப்புகின்ற கடவுள்-ன் கட்டளையாகும். எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்கின்றார், மேலும் தாராளமாக அவருக்கு வெகுமதியளிக்கின்றார்.
[65:4] இறுதி மாதவிடாயை அடைந்து விட்டபெண் களைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருக்குமாயின், அவர்களுடைய இடைக் காலத் தவணை மூன்று மாதங்களாக இருத்தல் வேண்டும். மாதவிடாய் வராமல், அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனர் என்று தெரிய வரும் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் பிரசவிப்பதுடன் அவர்களுடைய இடைக்காலத் தவணை முடிவடைகின்றது. எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு அவர் ஒவ்வொன்றையும் எளிதாக்கு கின்றார்.
[65:6] உங்களுடன் அவர்கள் வசித்து வந்த அதே வீட்டில் அவர்கள் வசிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும், மேலும் அவர்களாகவே வெளியேறி விடும்படி வாழ்க்கையை அவர்களுக்கு மிகவும் துன்பகர மானதாக ஆக்கி விடாதீர்கள். அவர்கள் கர்ப்பமாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும். அக்குழந்தைக்கு அவர்கள் பாலூட்டினால், அவர்களுடைய இந்தப் பணிக்கென நீங்கள் ஊதியமளிக்க வேண்டும். உங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும். நீங்கள் மனவேற்றுமை கொண்டால், குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக மற்றொரு பெண்ணை நீங்கள் பணிக்கமர்த்திக் கொள்ளலாம்.