Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 66:4 — தடை செய்தல்

நீங்கள் இருவரும் கடவுள்-இடம் வருந்தித் திருந்துவீர்களாயின் அப்போது உங்கள் இதயங்கள் கவனத்தில் கொண்டிருக்கும். ஆனால் அவருக்கெதிராக நீங்கள் ஒன்று சேர்ந்து கொண்டால், பின்னர் கடவுள் அவருடைய தோழராக இருக்கின்றார், மேலும் கப்ரியேலும் மற்றும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களும் அவ்வாறே இருக்கின்றனர். அத்துடன், வானவர்கள் அவருடைய உதவியாளர்களாக இருக்கின்றனர்.

[66:3] வேதம் வழங்கப்பட்டவர் தன்னுடைய மனைவி யரில் சிலரை குறிப்பிட்டதொரு வாக்குமூலத்தைக் கொண்டு நம்பிக்கை கொண்டார், பின்னர் அவர்களில் ஒருவர் அதனைப் பரப்பி விட்டார், மேலும் கடவுள் அதனைப்பற்றி, அவருக்குத் தெரியப்படுத்தினார். அவர் பின்னர், தன் மனைவியிடம், அவ்விவகாரத்தின் பகுதியைக் கூறினார், பகுதியை அலட்சியம் செய்து விட்டார். அவர் அவரிடம், “இதனைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டார் அவர், “எல்லாம் அறிந்தவர், மிகவும் நன்கறிந்தவரால் நான் தகவல் தெரிவிக்கப் பட்டேன்” என்று கூறினார்.

[66:5] அவர் உங்களை விவாகரத்துச் செய்து விட்டால், உங்களை விடச் சிறந்த, அடிபணிந்தவர்களான (முஸ்லிம்கள்), நம்பிக்கையாளர்களான (முஃமின்கள்), கீழ்ப்படிபவர்களான, வருந்தித் திருந்துபவர்களான, வழிபடுபவர்களான, பக்தியுடையவர்களான, முன்னரே திருமண மானவர்களான அல்லது கன்னிப் பெண்களான மற்ற மனைவியரை உங்களுடைய இடத்தில் அவருடைய இரட்சகர் மாற்றியமைத்து விடுவார்.