குர்ஆன் 66:3 — தடை செய்தல்
வேதம் வழங்கப்பட்டவர் தன்னுடைய மனைவி யரில் சிலரை குறிப்பிட்டதொரு வாக்குமூலத்தைக் கொண்டு நம்பிக்கை கொண்டார், பின்னர் அவர்களில் ஒருவர் அதனைப் பரப்பி விட்டார், மேலும் கடவுள் அதனைப்பற்றி, அவருக்குத் தெரியப்படுத்தினார். அவர் பின்னர், தன் மனைவியிடம், அவ்விவகாரத்தின் பகுதியைக் கூறினார், பகுதியை அலட்சியம் செய்து விட்டார். அவர் அவரிடம், “இதனைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டார் அவர், “எல்லாம் அறிந்தவர், மிகவும் நன்கறிந்தவரால் நான் தகவல் தெரிவிக்கப் பட்டேன்” என்று கூறினார்.
[66:2] உங்களுடைய பிரமாணங்களுடன் தொடர்புடைய சட்டங்களைக் கடவுள் உங்களுக்காக விதித்துள்ளார். கடவுள் உங்களுடைய இரட்சகர் ஆவார், மேலும் அவர்தான் எல்லாம் அறிந்தவர், ஞானம்மிக்கவர்.
[66:4] நீங்கள் இருவரும் கடவுள்-இடம் வருந்தித் திருந்துவீர்களாயின் அப்போது உங்கள் இதயங்கள் கவனத்தில் கொண்டிருக்கும். ஆனால் அவருக்கெதிராக நீங்கள் ஒன்று சேர்ந்து கொண்டால், பின்னர் கடவுள் அவருடைய தோழராக இருக்கின்றார், மேலும் கப்ரியேலும் மற்றும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களும் அவ்வாறே இருக்கின்றனர். அத்துடன், வானவர்கள் அவருடைய உதவியாளர்களாக இருக்கின்றனர்.