குர்ஆன் 66:2 — தடை செய்தல்
உங்களுடைய பிரமாணங்களுடன் தொடர்புடைய சட்டங்களைக் கடவுள் உங்களுக்காக விதித்துள்ளார். கடவுள் உங்களுடைய இரட்சகர் ஆவார், மேலும் அவர்தான் எல்லாம் அறிந்தவர், ஞானம்மிக்கவர்.
[66:1] வேதம் வழங்கப்பட்டவரே, உமக்கு அனுமதிக்கப் பட்டதாகக் கடவுள் ஆக்கியவற்றை நீர் ஏன் தடை செய்கின்றீர், வெறுமனே உம்முடைய மனைவி யரைத் திருப்திப்படுத்துவதற்காகவா? கடவுள் மன்னிப்பவர், கருணையாளர்.*
[66:3] வேதம் வழங்கப்பட்டவர் தன்னுடைய மனைவி யரில் சிலரை குறிப்பிட்டதொரு வாக்குமூலத்தைக் கொண்டு நம்பிக்கை கொண்டார், பின்னர் அவர்களில் ஒருவர் அதனைப் பரப்பி விட்டார், மேலும் கடவுள் அதனைப்பற்றி, அவருக்குத் தெரியப்படுத்தினார். அவர் பின்னர், தன் மனைவியிடம், அவ்விவகாரத்தின் பகுதியைக் கூறினார், பகுதியை அலட்சியம் செய்து விட்டார். அவர் அவரிடம், “இதனைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டார் அவர், “எல்லாம் அறிந்தவர், மிகவும் நன்கறிந்தவரால் நான் தகவல் தெரிவிக்கப் பட்டேன்” என்று கூறினார்.