Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 66:5 — தடை செய்தல்

அவர் உங்களை விவாகரத்துச் செய்து விட்டால், உங்களை விடச் சிறந்த, அடிபணிந்தவர்களான (முஸ்லிம்கள்), நம்பிக்கையாளர்களான (முஃமின்கள்), கீழ்ப்படிபவர்களான, வருந்தித் திருந்துபவர்களான, வழிபடுபவர்களான, பக்தியுடையவர்களான, முன்னரே திருமண மானவர்களான அல்லது கன்னிப் பெண்களான மற்ற மனைவியரை உங்களுடைய இடத்தில் அவருடைய இரட்சகர் மாற்றியமைத்து விடுவார்.

[66:4] நீங்கள் இருவரும் கடவுள்-இடம் வருந்தித் திருந்துவீர்களாயின் அப்போது உங்கள் இதயங்கள் கவனத்தில் கொண்டிருக்கும். ஆனால் அவருக்கெதிராக நீங்கள் ஒன்று சேர்ந்து கொண்டால், பின்னர் கடவுள் அவருடைய தோழராக இருக்கின்றார், மேலும் கப்ரியேலும் மற்றும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களும் அவ்வாறே இருக்கின்றனர். அத்துடன், வானவர்கள் அவருடைய உதவியாளர்களாக இருக்கின்றனர்.

[66:6] நம்பிக்கை கொண்டோரே, உங்களையும் மேலும் உங்களுடைய குடும்பத்தாரையும், மனிதர் களையும் மற்றும் பாறைகளையும் எரிபொருளாகக் கொண்டிருக்கின்ற அந்நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். கடவுள்-ன் உத்தரவை ஒரு போதும் மீறாத, கண்டிப்பான மற்றும் வலிமை மிக்க வானவர்கள் அதற்குக்காவலாக இருக்கின்றனர்; செய்யுமாறு அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை எதுவாயினும் அவர்கள் செய்வார்கள்.