Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:131 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நற்சகுணங்கள் அவர்களுடைய வழியில் வந்தபோது, அவர்கள், “ நாங்கள் இதற்குத் தகுதியானவர்கள்” என்று கூறினார்கள், ஆனால் அவர்களை ஒரு கஷ்டம் வருத்தியபோது, அவர்கள் மோஸஸையும் அவருடன் இருந்தவர்களையும் பழி கூறினார்கள். உண்மையில், அவர்களுடைய சகுனங்கள் கடவுள்-ஆல் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது, ஆனால் அவர்களில் பெரும் பாலானோர் அறிவதில்லை.

[7:130] அவர்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, பின்னர் ஃபேரோவின் மக்களை வறட்சி மற்றும் விளைச்சல் பற்றாக்குறையால் நாம் வருத்தினோம்.

[7:132] அவர்கள், “ உம்முடைய மாயாஜாலம் கொண்டு எங்களை ஏமாற்றுவதற்கு, எவ்வகையான அத்தாட்சியை எங்களுக்கு நீர் காட்டினாலும் பொருட்டல்ல, நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள்.