Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:133 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அதன் விளைவாக, அவர்கள் மீது வெள்ளம், வெட்டுக்கிளிகள், பேன், தவளைகள், மேலும் இரத்தம் போன்ற - ஆழ்ந்த அத்தாட்சிகளை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் தங்களுடைய கர்வத்திலேயே தொடர்ந்து இருந்தார்கள். அவர்கள் தீயமக்களாகவே இருந்தனர்.

[7:132] அவர்கள், “ உம்முடைய மாயாஜாலம் கொண்டு எங்களை ஏமாற்றுவதற்கு, எவ்வகையான அத்தாட்சியை எங்களுக்கு நீர் காட்டினாலும் பொருட்டல்ல, நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள்.

[7:134] அவர்களை ஒரு தொந்தரவு வருத்தியபொழு தெல்லாம், அவர்கள், “மோஸஸே, உம்முடைய இரட்சகரிடம் இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக - அவருக்கு நீர் நெருக்கமானவர். இந்த தொந்தரவை நீர் நீக்கிவிட்டால், உம்முடன் நாங்களும் நம்பிக்கை கொள்வோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை உம்முடன் அனுப்பிவிடுவோம்” என்று கூறினார்கள்.