குர்ஆன் 7:134 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்களை ஒரு தொந்தரவு வருத்தியபொழு தெல்லாம், அவர்கள், “மோஸஸே, உம்முடைய இரட்சகரிடம் இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக - அவருக்கு நீர் நெருக்கமானவர். இந்த தொந்தரவை நீர் நீக்கிவிட்டால், உம்முடன் நாங்களும் நம்பிக்கை கொள்வோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை உம்முடன் அனுப்பிவிடுவோம்” என்று கூறினார்கள்.
[7:133] அதன் விளைவாக, அவர்கள் மீது வெள்ளம், வெட்டுக்கிளிகள், பேன், தவளைகள், மேலும் இரத்தம் போன்ற - ஆழ்ந்த அத்தாட்சிகளை நாம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் தங்களுடைய கர்வத்திலேயே தொடர்ந்து இருந்தார்கள். அவர்கள் தீயமக்களாகவே இருந்தனர்.
[7:135] இருப்பினும், ஏதேனும் நீண்ட காலத்திற்கு அந்த தொந்தரவை நாம் நீக்கியபோது, அவர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறினார்கள்.