குர்ஆன் 7:138 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நாம் இஸ்ரவேலின் சந்ததியினரை கடலை கடக்கச் செய்து காப்பாற்றினோம். சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களை அவர்கள் கடந்து சென்றபோது, அவர்கள், “மோஸஸே, அவர்கள் வைத்திருக்கும் தெய்வங்களைப் போல, எங்களுக்கும் ஒரு தெய்வத்தை ஏற்படுத்து வீராக” என்று கூறினார்கள். அவர் கூறினார், “உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.
[7:137] அடக்கு முறை செய்யப்பட்ட மக்களை, கிழக்கிலும், மேற்கிலும், பூமிக்கு நாம் வாரிசாக்கினோம் மேலும் அதில் நாம் அருள் புரிந்தோம். அவர்களுடைய உறுதிப்பாட்டிற்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பொருட்டு, இஸ்ரவேலின் சந்ததி யினருக்கான உம்முடைய இரட்சகரின் அருள்பாலிக்கப்பட்ட கட்டளைகள் இவ்விதம் பூர்த்தியாயின, மேலும் ஃபேரோ மற்றும் அவனுடைய சமூகத்தாரின் செயல்களையும், அவர்கள் அறுவடை செய்த அனைத்தையும் நாம் அழித்தோம்.
[7:139] “இந்த மக்கள் ஓர் இறைநிந்தனை செய்து கொண்டிருக்கின்றார்கள், ஏனெனில்அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ, அது அவர்களுக்கு பேராபத்தானதாகும்.