குர்ஆன் 7:142 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நாம் மோஸஸை முப்பது* இரவுகளுக்காக வரவழைத்தோம், மேலும் பத்து* இரவுகளை கூட்டி அவற்றை முழுமைப் படுத்தினோம். இவ்வாறு, அவருடைய உரையாடல் அவருடைய இரட்சகருடன் நாற்பது* இரவுகள் நீடித்தது. மோஸஸ் அவருடைய சகோதரர் ஆரோனிடம், “என்னுடைய மக்க ளுடன் இங்கு தங்கியிருப்பீராக, நன்னெறியைப் பேணிக் கொள்வீராக, மேலும் சீர் கெட்டவர்களின் பாதைகளைப் பின்பற்றாதிருப்பீராக” என்று கூறினார்.
[7:141] உங்கள் மகன்களைக் கொலைசெய்தும், உங்கள் மகள்களை உயிருடன் விட்டு வைத்தும், உங்களை மிக மோசமான கொடுமைகளால் துன்புறுத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுதலை செய்ததை நினைவு கூருங்கள். அது உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக் கொரு கடினமான சோதனையாக இருந்தது.
[7:143] மோஸஸ், நாம் நியமித்த நேரத்தில் வந்தபோது, அவருடைய இரட்சகர் அவருடன் பேசினார், அவர், “ என்னுடைய இரட்சகரே, உம்மை நோக்கவும் பார்க்கவும் என்னை அனுமதிப்பீராக” என்று கூறினார். அவர், “நீர் என்னை பார்க்க முடியாது. அந்த மலையை நோக்குவீராக; அது அதனுடைய இடத்திலேயே நிலைத்து இருந்தது என்றால், நீர் என்னை பார்க்க இயலும்,” என்று கூறினார். பின்னர், அவருடைய இரட்சகர் தன்னை மலையினில் வெளிப்படுத்தினார், மேலும் இது அதனை நொறுங்கிப் போகும்படியாக்கியது. மோஸஸ் மயங்கி விழுந்தார். அவர் நினைவை அடைந்த போது, அவர், “நீர் போற்றுதலுக்குரியவர். நான் உம்மிடம் வருந்தித்திருந்துகின்றேன், மேலும் நான் மிகவும் உறுதி அடைந்த ஒரு நம்பிக்கையாளராக இருக்கின்றேன்” என்று கூறினார்.