Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:141 — ஆன்மா தூய்மையடையும் இடம்

உங்கள் மகன்களைக் கொலைசெய்தும், உங்கள் மகள்களை உயிருடன் விட்டு வைத்தும், உங்களை மிக மோசமான கொடுமைகளால் துன்புறுத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுதலை செய்ததை நினைவு கூருங்கள். அது உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக் கொரு கடினமான சோதனையாக இருந்தது.

[7:140] “இவ்வுலகில் மற்றெவர்களையும் விட அதிகமாக உங்களுக்கு அவர் அருள்புரிந்திருக்கும்போது, உங்களுடைய தெய்வமாக இருப்பதற்கு கடவுள் -ஐத் தவிர மற்றொன்றை உங்களுக்காக நான் தேடுவேனா?”

[7:142] நாம் மோஸஸை முப்பது* இரவுகளுக்காக வரவழைத்தோம், மேலும் பத்து* இரவுகளை கூட்டி அவற்றை முழுமைப் படுத்தினோம். இவ்வாறு, அவருடைய உரையாடல் அவருடைய இரட்சகருடன் நாற்பது* இரவுகள் நீடித்தது. மோஸஸ் அவருடைய சகோதரர் ஆரோனிடம், “என்னுடைய மக்க ளுடன் இங்கு தங்கியிருப்பீராக, நன்னெறியைப் பேணிக் கொள்வீராக, மேலும் சீர் கெட்டவர்களின் பாதைகளைப் பின்பற்றாதிருப்பீராக” என்று கூறினார்.