குர்ஆன் 7:144 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர், “ மோஸஸே, என்னுடைய செய்திகளையும், உம்மோடு பேசியதையும் கொண்டும், அனைத்து மக்களில் இருந்தும், நான் உம்மை தேர்ந்தேடுத் துள்ளேன். ஆகையால், நான் உமக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்வீராக, மேலும் நன்றியுடையவராக இருப்பீராக” என்று கூறினார்.
[7:143] மோஸஸ், நாம் நியமித்த நேரத்தில் வந்தபோது, அவருடைய இரட்சகர் அவருடன் பேசினார், அவர், “ என்னுடைய இரட்சகரே, உம்மை நோக்கவும் பார்க்கவும் என்னை அனுமதிப்பீராக” என்று கூறினார். அவர், “நீர் என்னை பார்க்க முடியாது. அந்த மலையை நோக்குவீராக; அது அதனுடைய இடத்திலேயே நிலைத்து இருந்தது என்றால், நீர் என்னை பார்க்க இயலும்,” என்று கூறினார். பின்னர், அவருடைய இரட்சகர் தன்னை மலையினில் வெளிப்படுத்தினார், மேலும் இது அதனை நொறுங்கிப் போகும்படியாக்கியது. மோஸஸ் மயங்கி விழுந்தார். அவர் நினைவை அடைந்த போது, அவர், “நீர் போற்றுதலுக்குரியவர். நான் உம்மிடம் வருந்தித்திருந்துகின்றேன், மேலும் நான் மிகவும் உறுதி அடைந்த ஒரு நம்பிக்கையாளராக இருக்கின்றேன்” என்று கூறினார்.
[7:145] அனைத்து வகையான ஞான உபதேசங்களையும் மேலும் அனைத்தினுடைய விபரங்களையும் பலகைகளின் மீது அவருக்காக நாம் எழுதினோம்: “நீர் இந்த போதனைகளை உறுதியாகக் கடைப் பிடிக்க வேண்டும், மேலும் உம்முடைய மக்களை யும் இவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்கும்படி உபதேசிப்பீராக-இவை மிகச் சிறந்த போதனை களாகும். தீயவர்களின் விதியை நான் உமக்கு குறிப்பிட்டு காட்டுவேன்.” தெய்வீகத் தலையீடு நம்பமறுப்பவர்களை