குர்ஆன் 7:145 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அனைத்து வகையான ஞான உபதேசங்களையும் மேலும் அனைத்தினுடைய விபரங்களையும் பலகைகளின் மீது அவருக்காக நாம் எழுதினோம்: “நீர் இந்த போதனைகளை உறுதியாகக் கடைப் பிடிக்க வேண்டும், மேலும் உம்முடைய மக்களை யும் இவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்கும்படி உபதேசிப்பீராக-இவை மிகச் சிறந்த போதனை களாகும். தீயவர்களின் விதியை நான் உமக்கு குறிப்பிட்டு காட்டுவேன்.” தெய்வீகத் தலையீடு நம்பமறுப்பவர்களை
[7:144] அவர், “ மோஸஸே, என்னுடைய செய்திகளையும், உம்மோடு பேசியதையும் கொண்டும், அனைத்து மக்களில் இருந்தும், நான் உம்மை தேர்ந்தேடுத் துள்ளேன். ஆகையால், நான் உமக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்வீராக, மேலும் நன்றியுடையவராக இருப்பீராக” என்று கூறினார்.
[7:146] நியாயமின்றி, பூமியின் மீது கர்வமோடிருப் பவர்களை என்னுடைய வெளிப்பாடுகளி லிருந்தும் நான் திருப்பிவிடுவேன். அதன் விளைவாக, எல்லா வகையான சான்றை பார்த்த போதும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் வழிகாட்டலைக் கொண்ட பாதையைக் காணும் போது அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அவர்கள் வழி தவறிய பாதையைக் காணும் போது, அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்வார்கள். இது நம்முடைய சான்றுகளை அவர்கள் நிராகரித்து, மேலும் முழுவதுமாக அதன் மீது கவனமற்றவர்களாக இருப்பதன் விளைவாகும்.