Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:146 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நியாயமின்றி, பூமியின் மீது கர்வமோடிருப் பவர்களை என்னுடைய வெளிப்பாடுகளி லிருந்தும் நான் திருப்பிவிடுவேன். அதன் விளைவாக, எல்லா வகையான சான்றை பார்த்த போதும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் வழிகாட்டலைக் கொண்ட பாதையைக் காணும் போது அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அவர்கள் வழி தவறிய பாதையைக் காணும் போது, அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்வார்கள். இது நம்முடைய சான்றுகளை அவர்கள் நிராகரித்து, மேலும் முழுவதுமாக அதன் மீது கவனமற்றவர்களாக இருப்பதன் விளைவாகும்.

[7:145] அனைத்து வகையான ஞான உபதேசங்களையும் மேலும் அனைத்தினுடைய விபரங்களையும் பலகைகளின் மீது அவருக்காக நாம் எழுதினோம்: “நீர் இந்த போதனைகளை உறுதியாகக் கடைப் பிடிக்க வேண்டும், மேலும் உம்முடைய மக்களை யும் இவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்கும்படி உபதேசிப்பீராக-இவை மிகச் சிறந்த போதனை களாகும். தீயவர்களின் விதியை நான் உமக்கு குறிப்பிட்டு காட்டுவேன்.” தெய்வீகத் தலையீடு நம்பமறுப்பவர்களை

[7:147] எவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளையும் மேலும் மறுவுலகின் சந்திப்பையும் நிராகரிக்கின்றார் களோ, அவர்களுடைய செயல்கள் பயனற்றவைகளாக இருக்கின்றன. அவர்கள் செய்தவற்றிற்குத்தானே அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்?