Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:147 — ஆன்மா தூய்மையடையும் இடம்

எவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளையும் மேலும் மறுவுலகின் சந்திப்பையும் நிராகரிக்கின்றார் களோ, அவர்களுடைய செயல்கள் பயனற்றவைகளாக இருக்கின்றன. அவர்கள் செய்தவற்றிற்குத்தானே அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்?

[7:146] நியாயமின்றி, பூமியின் மீது கர்வமோடிருப் பவர்களை என்னுடைய வெளிப்பாடுகளி லிருந்தும் நான் திருப்பிவிடுவேன். அதன் விளைவாக, எல்லா வகையான சான்றை பார்த்த போதும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் வழிகாட்டலைக் கொண்ட பாதையைக் காணும் போது அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அவர்கள் வழி தவறிய பாதையைக் காணும் போது, அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்வார்கள். இது நம்முடைய சான்றுகளை அவர்கள் நிராகரித்து, மேலும் முழுவதுமாக அதன் மீது கவனமற்றவர்களாக இருப்பதன் விளைவாகும்.

[7:148] அவர் இல்லாத போது, மோஸஸின் மக்கள் அவர்களுடைய ஆபரணங்களைக் கொண்டு ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தைக் கொண்டு பூர்த்தியான ஒரு கன்றுக்குட்டியின்* சிலையைச் செய்தனர். அது அவர்களிடத்தில் பேசவோ அல்லது எந்த ஒரு பாதையிலும் அவர்களை வழி நடத்தவோ முடியாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை வழி பட்டனர், மேலும் இவ்வாறு தீயவர்கள் ஆயினர்.