Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:159 — ஆன்மா தூய்மையடையும் இடம்

மோஸஸைப் பின்பற்றுபவர்களில் சத்தியத்திற் கேற்ப வழிநடத்தக் கூடியவர்கள் இருக்கின்றனர், மேலும் அந்தச் சத்தியம் அவர்களை நன்னெறியாளர்களாக ஆக்குகின்றது.

[7:158] “மக்களே, நான் உங்கள் அனைவருக்குமான கடவுள்-ன் தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவருக்கே உரியது. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவரே வாழ்வையும் மரணத்தையும் கட்டுப்படுத்து கின்றார்” என்று கூறுவீராக. ஆகையால், நீங்கள் கடவுள் மீதும், கடவுள்-ஐயும் அவரது வார்த்தைகளையும் நம்புகின்ற வேற்று இனத்தவராகிய வேதம் வழங்கப்பட்டவராகிய அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் வழி நடத்தப்படும் பொருட்டு அவரைப் பின்பற்றுங்கள்.

[7:160] நாம் அவர்களைப் பன்னிரண்டு குலங்களைக் கொண்ட சமூகங்களாகப் பிரித்தோம், மேலும் அவரது மக்கள் அவரிடம் தண்ணீருக்காகக் கேட்டபோது மோஸஸிற்கு நாம் “உமது கைத்தடியால் பாறையில் அடிப்பீராக” என்று உள்ளுணர்வளித்தோம், உடனே பன்னிரண்டு ஊற்றுக்கள் அதிலிருந்து பொங்கி வழிந்தன. இவ்விதமாக, ஒவ்வொரு சமூகமும் அதற்கான தண்ணீரை அறிந்து கொண்டது. மேலும் மேகங்களை அவர்கள் மீது நிழலிடச் செய்தோம், மேலும் அவர்களுக்கு மன்னா மற்றும் காடைகளை கீழே அனுப்பினோம்: “நாம் உங்களுக்கு வழங்கியுள்ள நல்ல பொருட்களிலிருந்து உண்ணுங்கள்.” அவர்கள் தீங்கிழைத்தது நமக்கல்ல; அவர்கள் தங்களு டைய சொந்த ஆன்மாக்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.