Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:158 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“மக்களே, நான் உங்கள் அனைவருக்குமான கடவுள்-ன் தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவருக்கே உரியது. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவரே வாழ்வையும் மரணத்தையும் கட்டுப்படுத்து கின்றார்” என்று கூறுவீராக. ஆகையால், நீங்கள் கடவுள் மீதும், கடவுள்-ஐயும் அவரது வார்த்தைகளையும் நம்புகின்ற வேற்று இனத்தவராகிய வேதம் வழங்கப்பட்டவராகிய அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் வழி நடத்தப்படும் பொருட்டு அவரைப் பின்பற்றுங்கள்.

[7:157] “(4)அவர்களுடைய தோரா மற்றும் சுவிசேஷ த்தில்* யாரை எழுதப்பட்டதாக அவர்கள் காண்கின்றார்களோ, அந்த வேற்று இனத்தவராகிய, வேதம் வழங்கப்பட்டவராகிய (முஹம்மது) அந்த தூதரை பின்பற்றுங்கள். அவர் அவர்களை நன்னெறியுடையோராய் இருக்கும்படி உபதேசிக்கின்றார், தீமையிலி ருந்து அவர்களை தடுக்கின்றார், எல்லா நல்ல உணவையும் அவர்களுக்கு அனுமதிக்கின்றார், மேலும் கெட்டவையாக இருப்பவற்றை தடை செய்கின்றார். மேலும் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளையும் மற்றும் விலங்குகளையும் நீக்குகின்றார். எவர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டும், அவருக்கு கண்ணியமளித்தும், அவருக்கு ஆதரவளித்தும் மேலும் அவருடன் வந்திருக்கின்ற ஒளியினை பின்பற்றவும் செய்கின்றார்களோ, அவர்களே வெற்றியாளர்கள்.”

[7:159] மோஸஸைப் பின்பற்றுபவர்களில் சத்தியத்திற் கேற்ப வழிநடத்தக் கூடியவர்கள் இருக்கின்றனர், மேலும் அந்தச் சத்தியம் அவர்களை நன்னெறியாளர்களாக ஆக்குகின்றது.