குர்ஆன் 7:157 — ஆன்மா தூய்மையடையும் இடம்
الَّذينَ يَتَّبِعونَ الرَّسولَ النَّبِىَّ الأُمِّىَّ الَّذى يَجِدونَهُ مَكتوبًا عِندَهُم فِى التَّورىٰةِ وَالإِنجيلِ يَأمُرُهُم بِالمَعروفِ وَيَنهىٰهُم عَنِ المُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيهِمُ الخَبٰئِثَ وَيَضَعُ عَنهُم إِصرَهُم وَالأَغلٰلَ الَّتى كانَت عَلَيهِم ۚ فَالَّذينَ ءامَنوا بِهِ وَعَزَّروهُ وَنَصَروهُ وَاتَّبَعُوا النّورَ الَّذى أُنزِلَ مَعَهُ ۙ أُولٰئِكَ هُمُ المُفلِحونَ
“(4)அவர்களுடைய தோரா மற்றும் சுவிசேஷ த்தில்* யாரை எழுதப்பட்டதாக அவர்கள் காண்கின்றார்களோ, அந்த வேற்று இனத்தவராகிய, வேதம் வழங்கப்பட்டவராகிய (முஹம்மது) அந்த தூதரை பின்பற்றுங்கள். அவர் அவர்களை நன்னெறியுடையோராய் இருக்கும்படி உபதேசிக்கின்றார், தீமையிலி ருந்து அவர்களை தடுக்கின்றார், எல்லா நல்ல உணவையும் அவர்களுக்கு அனுமதிக்கின்றார், மேலும் கெட்டவையாக இருப்பவற்றை தடை செய்கின்றார். மேலும் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளையும் மற்றும் விலங்குகளையும் நீக்குகின்றார். எவர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டும், அவருக்கு கண்ணியமளித்தும், அவருக்கு ஆதரவளித்தும் மேலும் அவருடன் வந்திருக்கின்ற ஒளியினை பின்பற்றவும் செய்கின்றார்களோ, அவர்களே வெற்றியாளர்கள்.”
[7:156] “மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும், எங்கள் மீது நன்னெறியினை விதித்திடுவீராக; நாங்கள் உம்மிடம் வருந்தித்திருந்துபவர்களாக இருக்கின்றோம்.” அவர் கூறினார், “என்னுடைய தண்டனை நான் நாடுகின்றவர்கள் மீது ஏற்படும். ஆனால் என்னுடைய கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கும், ஆயினும், அதனை நான் (1) நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கும், (2) கடமையான தர்மத்தைக் (ஜகாத்)* கொடுப்போருக்கும், (3) நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்வோருக்குமே குறிப் பிட்டுக் கொடுப்பேன், மேலும்
[7:158] “மக்களே, நான் உங்கள் அனைவருக்குமான கடவுள்-ன் தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவருக்கே உரியது. அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவரே வாழ்வையும் மரணத்தையும் கட்டுப்படுத்து கின்றார்” என்று கூறுவீராக. ஆகையால், நீங்கள் கடவுள் மீதும், கடவுள்-ஐயும் அவரது வார்த்தைகளையும் நம்புகின்ற வேற்று இனத்தவராகிய வேதம் வழங்கப்பட்டவராகிய அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் வழி நடத்தப்படும் பொருட்டு அவரைப் பின்பற்றுங்கள்.