குர்ஆன் 7:156 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும், எங்கள் மீது நன்னெறியினை விதித்திடுவீராக; நாங்கள் உம்மிடம் வருந்தித்திருந்துபவர்களாக இருக்கின்றோம்.” அவர் கூறினார், “என்னுடைய தண்டனை நான் நாடுகின்றவர்கள் மீது ஏற்படும். ஆனால் என்னுடைய கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கும், ஆயினும், அதனை நான் (1) நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கும், (2) கடமையான தர்மத்தைக் (ஜகாத்)* கொடுப்போருக்கும், (3) நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்வோருக்குமே குறிப் பிட்டுக் கொடுப்பேன், மேலும்
[7:155] பின்னர் மோஸஸ் நாம் உறுதி செய்த உரை யாடலுக்கு வருவதற்காகத் தன் சமூகத்தாரி லிருந்து எழுபது பேரைத் தேர்ந்தெடுத்தார். அதிர்வு அவர்களை ஆட்டிய பொழுது, அவர் கூறினார், “என்னுடைய இரட்சகரே, இவ்விதம் நீர் நாடியிருந்தால் அவர்களுடன் என்னையும் சேர்த்து முன்னரே நீர் அழித்திருக்க இயலும். எங்களில் மூடர்களாக இருப்பவர்களின் செயல் களுக்காக எங்களை நீர் அழித்து விடுவீரா? இது எங்களுக்கென நீர் ஏற்படுத்திய ஒரு சோதனை யாகவே இருக்க வேண்டும். இதைக் கொண்டு, நீர் நாடுவோரைத் தண்டிக்கின்றீர் மேலும் நீர் நாடுவோரை வழிநடத்துகின்றீர். நீரே எங்கள் இரட்சகரும் அதிபதியும் ஆவீர், எனவே எங்களை மன்னிப்பீராக, உமது கருணையைக் கொண்டு எங்கள்மேல் பொழிவீராக; மன்னிப் போரில் நீரே மிகச் சிறந்தவர்.
[7:157] “(4)அவர்களுடைய தோரா மற்றும் சுவிசேஷ த்தில்* யாரை எழுதப்பட்டதாக அவர்கள் காண்கின்றார்களோ, அந்த வேற்று இனத்தவராகிய, வேதம் வழங்கப்பட்டவராகிய (முஹம்மது) அந்த தூதரை பின்பற்றுங்கள். அவர் அவர்களை நன்னெறியுடையோராய் இருக்கும்படி உபதேசிக்கின்றார், தீமையிலி ருந்து அவர்களை தடுக்கின்றார், எல்லா நல்ல உணவையும் அவர்களுக்கு அனுமதிக்கின்றார், மேலும் கெட்டவையாக இருப்பவற்றை தடை செய்கின்றார். மேலும் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளையும் மற்றும் விலங்குகளையும் நீக்குகின்றார். எவர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டும், அவருக்கு கண்ணியமளித்தும், அவருக்கு ஆதரவளித்தும் மேலும் அவருடன் வந்திருக்கின்ற ஒளியினை பின்பற்றவும் செய்கின்றார்களோ, அவர்களே வெற்றியாளர்கள்.”