குர்ஆன் 7:155 — ஆன்மா தூய்மையடையும் இடம்
பின்னர் மோஸஸ் நாம் உறுதி செய்த உரை யாடலுக்கு வருவதற்காகத் தன் சமூகத்தாரி லிருந்து எழுபது பேரைத் தேர்ந்தெடுத்தார். அதிர்வு அவர்களை ஆட்டிய பொழுது, அவர் கூறினார், “என்னுடைய இரட்சகரே, இவ்விதம் நீர் நாடியிருந்தால் அவர்களுடன் என்னையும் சேர்த்து முன்னரே நீர் அழித்திருக்க இயலும். எங்களில் மூடர்களாக இருப்பவர்களின் செயல் களுக்காக எங்களை நீர் அழித்து விடுவீரா? இது எங்களுக்கென நீர் ஏற்படுத்திய ஒரு சோதனை யாகவே இருக்க வேண்டும். இதைக் கொண்டு, நீர் நாடுவோரைத் தண்டிக்கின்றீர் மேலும் நீர் நாடுவோரை வழிநடத்துகின்றீர். நீரே எங்கள் இரட்சகரும் அதிபதியும் ஆவீர், எனவே எங்களை மன்னிப்பீராக, உமது கருணையைக் கொண்டு எங்கள்மேல் பொழிவீராக; மன்னிப் போரில் நீரே மிகச் சிறந்தவர்.
[7:154] மோஸஸின் கோபம் தணிந்தபோது, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்களுக்கு வழி காட்டலையும் கருணையும் கொண்ட பலகைகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.
[7:156] “மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும், எங்கள் மீது நன்னெறியினை விதித்திடுவீராக; நாங்கள் உம்மிடம் வருந்தித்திருந்துபவர்களாக இருக்கின்றோம்.” அவர் கூறினார், “என்னுடைய தண்டனை நான் நாடுகின்றவர்கள் மீது ஏற்படும். ஆனால் என்னுடைய கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கும், ஆயினும், அதனை நான் (1) நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கும், (2) கடமையான தர்மத்தைக் (ஜகாத்)* கொடுப்போருக்கும், (3) நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்வோருக்குமே குறிப் பிட்டுக் கொடுப்பேன், மேலும்