Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:154 — ஆன்மா தூய்மையடையும் இடம்

மோஸஸின் கோபம் தணிந்தபோது, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்களுக்கு வழி காட்டலையும் கருணையும் கொண்ட பலகைகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.

[7:153] பாவங்கள் செய்துவிட்டுப் பின்னர் அதற்காக வருந்தித்திருந்திப் பின்னர் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, உம்முடைய இரட்சகர்- இதன் பின்னரும்-மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.

[7:155] பின்னர் மோஸஸ் நாம் உறுதி செய்த உரை யாடலுக்கு வருவதற்காகத் தன் சமூகத்தாரி லிருந்து எழுபது பேரைத் தேர்ந்தெடுத்தார். அதிர்வு அவர்களை ஆட்டிய பொழுது, அவர் கூறினார், “என்னுடைய இரட்சகரே, இவ்விதம் நீர் நாடியிருந்தால் அவர்களுடன் என்னையும் சேர்த்து முன்னரே நீர் அழித்திருக்க இயலும். எங்களில் மூடர்களாக இருப்பவர்களின் செயல் களுக்காக எங்களை நீர் அழித்து விடுவீரா? இது எங்களுக்கென நீர் ஏற்படுத்திய ஒரு சோதனை யாகவே இருக்க வேண்டும். இதைக் கொண்டு, நீர் நாடுவோரைத் தண்டிக்கின்றீர் மேலும் நீர் நாடுவோரை வழிநடத்துகின்றீர். நீரே எங்கள் இரட்சகரும் அதிபதியும் ஆவீர், எனவே எங்களை மன்னிப்பீராக, உமது கருணையைக் கொண்டு எங்கள்மேல் பொழிவீராக; மன்னிப் போரில் நீரே மிகச் சிறந்தவர்.