குர்ஆன் 7:161 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்களிடம், “வசிப்பதற்கு இந்த நகரத்தினுள் செல்லுங்கள், மேலும் நீங்கள் விரும்பிய வண்ணம் அங்கு உண்ணுங்கள், மக்களை இணக்கமாக நடத்துங்கள், மேலும் வாயிலுக் குள் பணிவாக நுழையுங்கள். அப்போது நாம் உங்களுடைய வரம்பு மீறல்களை மன்னிப்போம். நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியைப் பன்மடங்கு பெருக்கித்தருவோம்” என்று கூறப்பட்டதை நினைவு கூர்வீராக.
[7:160] நாம் அவர்களைப் பன்னிரண்டு குலங்களைக் கொண்ட சமூகங்களாகப் பிரித்தோம், மேலும் அவரது மக்கள் அவரிடம் தண்ணீருக்காகக் கேட்டபோது மோஸஸிற்கு நாம் “உமது கைத்தடியால் பாறையில் அடிப்பீராக” என்று உள்ளுணர்வளித்தோம், உடனே பன்னிரண்டு ஊற்றுக்கள் அதிலிருந்து பொங்கி வழிந்தன. இவ்விதமாக, ஒவ்வொரு சமூகமும் அதற்கான தண்ணீரை அறிந்து கொண்டது. மேலும் மேகங்களை அவர்கள் மீது நிழலிடச் செய்தோம், மேலும் அவர்களுக்கு மன்னா மற்றும் காடைகளை கீழே அனுப்பினோம்: “நாம் உங்களுக்கு வழங்கியுள்ள நல்ல பொருட்களிலிருந்து உண்ணுங்கள்.” அவர்கள் தீங்கிழைத்தது நமக்கல்ல; அவர்கள் தங்களு டைய சொந்த ஆன்மாக்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
[7:162] ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்குத் தரப்பட்ட கட்டளைகளுக்கு மாற்றாக வேறு கட்டளைகளை அமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, நாம் அவர்களுடைய தீய செயல்கள் காரணமாக விண்ணிலிருந்து அவர்கள்மீது தண்டனையை இறக்கினோம்.