Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:162 — ஆன்மா தூய்மையடையும் இடம்

ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்குத் தரப்பட்ட கட்டளைகளுக்கு மாற்றாக வேறு கட்டளைகளை அமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, நாம் அவர்களுடைய தீய செயல்கள் காரணமாக விண்ணிலிருந்து அவர்கள்மீது தண்டனையை இறக்கினோம்.

[7:161] அவர்களிடம், “வசிப்பதற்கு இந்த நகரத்தினுள் செல்லுங்கள், மேலும் நீங்கள் விரும்பிய வண்ணம் அங்கு உண்ணுங்கள், மக்களை இணக்கமாக நடத்துங்கள், மேலும் வாயிலுக் குள் பணிவாக நுழையுங்கள். அப்போது நாம் உங்களுடைய வரம்பு மீறல்களை மன்னிப்போம். நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியைப் பன்மடங்கு பெருக்கித்தருவோம்” என்று கூறப்பட்டதை நினைவு கூர்வீராக.

[7:163] ஸப்பத்தின் புனிதத்தைப் பாழ்படுத்திய கடலோர சமூகத்தாரை, அவர்களுக்கு நினைவூட்டுவீராக. ஸப்பத்தினை அவர்கள் கடைப்பிடித்த போது அவர்களிடத்தில் மீன்கள் அபரிமிதமாக வந்தன. மேலும் அவர்கள் ஸப்பத்தினை மீறிய போது மீன்கள் வரவில்லை. அவர்களுடைய வரம்புமீறல்களின் விளைவாக, இவ்விதமாக நாம் அவர்களை துன்புறுத்தினோம்.