குர்ஆன் 7:163 — ஆன்மா தூய்மையடையும் இடம்
ஸப்பத்தின் புனிதத்தைப் பாழ்படுத்திய கடலோர சமூகத்தாரை, அவர்களுக்கு நினைவூட்டுவீராக. ஸப்பத்தினை அவர்கள் கடைப்பிடித்த போது அவர்களிடத்தில் மீன்கள் அபரிமிதமாக வந்தன. மேலும் அவர்கள் ஸப்பத்தினை மீறிய போது மீன்கள் வரவில்லை. அவர்களுடைய வரம்புமீறல்களின் விளைவாக, இவ்விதமாக நாம் அவர்களை துன்புறுத்தினோம்.
[7:162] ஆனால் அவர்களில் இருந்த தீயவர்கள் அவர் களுக்குத் தரப்பட்ட கட்டளைகளுக்கு மாற்றாக வேறு கட்டளைகளை அமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக, நாம் அவர்களுடைய தீய செயல்கள் காரணமாக விண்ணிலிருந்து அவர்கள்மீது தண்டனையை இறக்கினோம்.
[7:164] அவர்களில் ஒரு கூட்டத்தினர், “கடவுள் நிச்சயமாக அழித்துவிடவோ அல்லது கடுi மயாக தண்டிக்கவோ போகும் மக்களுக்கு நீங்கள் ஏன் உபதேசிக்க வேண்டும்?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள், “உங்கள் இரட்ச கரிடம் பிழைபொறுக்கத் தேடுங்கள்,” அவர்கள் காப்பாற்றப்பட்டு விடவும் கூடும் என்று பதிலளித்தனர்.