Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:167 — ஆன்மா தூய்மையடையும் இடம்

இன்னும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை, அவர்கள் மீது கடும் அடக்குமுறை கொண்டு துன்புறுத்தும் மக்களை அவர்களுக்கெதிராக அவர் எழுப்புவார் என்று உம்முடைய இரட்சகர் தீர்மானித்து விட்டார். உம்முடைய இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதில் மிகத்திறன் வாய்ந்தவர், மேலும் நிச்சயமாக அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[7:166] அவர்கள் தொடர்ந்து கட்டளைகளை எதிர்த்த போது நாம் அவர்களிடம், “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்” என்று கூறினோம்.

[7:168] பூமியெங்கும் அநேக சமூகங்களுக்கு மத்தியில் நாம் அவர்களைச் சிதறடித்தோம். அவர்களில் சிலர் நன்னெறியாளர்களாக இருந்தார்கள், மற்றும் சிலர் நன்னெறியில் குறைவுடைய வர்களாக இருந்தார்கள். நாம் அவர்களை, அவர்கள் திரும்பக்கூடும் என்பதற்காக வளமையையும் கஷ்டத்தையும் கொண்டு சோதித்தோம்.