Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:168 — ஆன்மா தூய்மையடையும் இடம்

பூமியெங்கும் அநேக சமூகங்களுக்கு மத்தியில் நாம் அவர்களைச் சிதறடித்தோம். அவர்களில் சிலர் நன்னெறியாளர்களாக இருந்தார்கள், மற்றும் சிலர் நன்னெறியில் குறைவுடைய வர்களாக இருந்தார்கள். நாம் அவர்களை, அவர்கள் திரும்பக்கூடும் என்பதற்காக வளமையையும் கஷ்டத்தையும் கொண்டு சோதித்தோம்.

[7:167] இன்னும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை, அவர்கள் மீது கடும் அடக்குமுறை கொண்டு துன்புறுத்தும் மக்களை அவர்களுக்கெதிராக அவர் எழுப்புவார் என்று உம்முடைய இரட்சகர் தீர்மானித்து விட்டார். உம்முடைய இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதில் மிகத்திறன் வாய்ந்தவர், மேலும் நிச்சயமாக அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[7:169] அவர்களைத் தொடர்ந்து வேதத்திற்கு வாரிசு களாக புதிய தலைமுறையினர்களை அவர் மாற்றி அமைத்தார். ஆனால் அவர்கள் அதற்குப் பதிலாக, “ நாங்கள் மன்னிக்கப்படுவோம்“ என்று கூறியவர்களாக இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஆனால் அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்து இவ்வுலகின் பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட னர். வேதத்தை உறுதியாகக் கடைப்பிடிப்போம் மேலும் கடவுள்-ஐப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாமலிருப்போம் என்று அவர்கள் உடன்படிக்கை எடுத்துக் கொள்ள வில்லையா? அவர்கள் வேதத்தை கற்றுக் கொள்ளவில்லையா? நிச்சயமாக, நன்னெறி யைப் பேணுபவர்களுக்கு மறுவுலகின் வசிப் பிடம் மிகவும் சிறந்தது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?