குர்ஆன் 7:169 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்களைத் தொடர்ந்து வேதத்திற்கு வாரிசு களாக புதிய தலைமுறையினர்களை அவர் மாற்றி அமைத்தார். ஆனால் அவர்கள் அதற்குப் பதிலாக, “ நாங்கள் மன்னிக்கப்படுவோம்“ என்று கூறியவர்களாக இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஆனால் அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்து இவ்வுலகின் பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட னர். வேதத்தை உறுதியாகக் கடைப்பிடிப்போம் மேலும் கடவுள்-ஐப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாமலிருப்போம் என்று அவர்கள் உடன்படிக்கை எடுத்துக் கொள்ள வில்லையா? அவர்கள் வேதத்தை கற்றுக் கொள்ளவில்லையா? நிச்சயமாக, நன்னெறி யைப் பேணுபவர்களுக்கு மறுவுலகின் வசிப் பிடம் மிகவும் சிறந்தது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[7:168] பூமியெங்கும் அநேக சமூகங்களுக்கு மத்தியில் நாம் அவர்களைச் சிதறடித்தோம். அவர்களில் சிலர் நன்னெறியாளர்களாக இருந்தார்கள், மற்றும் சிலர் நன்னெறியில் குறைவுடைய வர்களாக இருந்தார்கள். நாம் அவர்களை, அவர்கள் திரும்பக்கூடும் என்பதற்காக வளமையையும் கஷ்டத்தையும் கொண்டு சோதித்தோம்.
[7:170] வேதத்தை உறுதியாகப் பின்பற்றியும் மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடை பிடித்தும் வருபவர்கள், நாம் பக்தியுள்ளவர்க ளுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவற மாட்டோம்.