குர்ஆன் 7:170 — ஆன்மா தூய்மையடையும் இடம்
வேதத்தை உறுதியாகப் பின்பற்றியும் மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடை பிடித்தும் வருபவர்கள், நாம் பக்தியுள்ளவர்க ளுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவற மாட்டோம்.
[7:169] அவர்களைத் தொடர்ந்து வேதத்திற்கு வாரிசு களாக புதிய தலைமுறையினர்களை அவர் மாற்றி அமைத்தார். ஆனால் அவர்கள் அதற்குப் பதிலாக, “ நாங்கள் மன்னிக்கப்படுவோம்“ என்று கூறியவர்களாக இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஆனால் அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்து இவ்வுலகின் பொருட்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட னர். வேதத்தை உறுதியாகக் கடைப்பிடிப்போம் மேலும் கடவுள்-ஐப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாமலிருப்போம் என்று அவர்கள் உடன்படிக்கை எடுத்துக் கொள்ள வில்லையா? அவர்கள் வேதத்தை கற்றுக் கொள்ளவில்லையா? நிச்சயமாக, நன்னெறி யைப் பேணுபவர்களுக்கு மறுவுலகின் வசிப் பிடம் மிகவும் சிறந்தது. நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[7:171] நாம் அவர்களுக்கு மேலே மலையை ஒரு குடையைப் போன்று உயர்த்தினோம், மேலும் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று அவர்கள் எண்ணினார்கள்: “நீங்கள் காப் பாற்றப்படும் பொருட்டு, நாம் உங்களுக்கு எதை வழங்கியுள்ளோமோ அதை திடமாக, உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.”