Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:171 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நாம் அவர்களுக்கு மேலே மலையை ஒரு குடையைப் போன்று உயர்த்தினோம், மேலும் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று அவர்கள் எண்ணினார்கள்: “நீங்கள் காப் பாற்றப்படும் பொருட்டு, நாம் உங்களுக்கு எதை வழங்கியுள்ளோமோ அதை திடமாக, உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.”

[7:170] வேதத்தை உறுதியாகப் பின்பற்றியும் மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடை பிடித்தும் வருபவர்கள், நாம் பக்தியுள்ளவர்க ளுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவற மாட்டோம்.

[7:172] உம்முடைய இரட்சகர், ஆதாமின் சந்ததிகள் அனைவரையும் ஒன்று கூட்டி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாக வைத்ததை நினைவு கூர்வீராக: “நான் உங்கள் இரட்சகர் அல்லவா?” அவர்கள் அனைவரும், “ஆம், நாங்கள் சாட்சியமளிக்கின்றோம்” என்று கூறினார்கள். இதன்படி மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில், “இதனைப் பற்றி நாங்கள் அறியாதிருந்தோம்,” என்று நீங்கள் கூறிட இயலாது.