குர்ஆன் 7:172 — ஆன்மா தூய்மையடையும் இடம்
உம்முடைய இரட்சகர், ஆதாமின் சந்ததிகள் அனைவரையும் ஒன்று கூட்டி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாக வைத்ததை நினைவு கூர்வீராக: “நான் உங்கள் இரட்சகர் அல்லவா?” அவர்கள் அனைவரும், “ஆம், நாங்கள் சாட்சியமளிக்கின்றோம்” என்று கூறினார்கள். இதன்படி மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில், “இதனைப் பற்றி நாங்கள் அறியாதிருந்தோம்,” என்று நீங்கள் கூறிட இயலாது.
[7:171] நாம் அவர்களுக்கு மேலே மலையை ஒரு குடையைப் போன்று உயர்த்தினோம், மேலும் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று அவர்கள் எண்ணினார்கள்: “நீங்கள் காப் பாற்றப்படும் பொருட்டு, நாம் உங்களுக்கு எதை வழங்கியுள்ளோமோ அதை திடமாக, உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதில் உள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.”
[7:173] அன்றியும், “எங்களுடைய மூதாதையர்கள் தான் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள், மேலும் நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளை மட்டுமே பின்பற்றினோம். மற்றவர்கள் புகுத்திய புதுமைகளுக்காக நீர் எங்களைத் தண்டிப் பீரா?” என்றும் நீங்கள் கூற இயலாது.