குர்ஆன் 7:173 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அன்றியும், “எங்களுடைய மூதாதையர்கள் தான் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள், மேலும் நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளை மட்டுமே பின்பற்றினோம். மற்றவர்கள் புகுத்திய புதுமைகளுக்காக நீர் எங்களைத் தண்டிப் பீரா?” என்றும் நீங்கள் கூற இயலாது.
[7:172] உம்முடைய இரட்சகர், ஆதாமின் சந்ததிகள் அனைவரையும் ஒன்று கூட்டி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாக வைத்ததை நினைவு கூர்வீராக: “நான் உங்கள் இரட்சகர் அல்லவா?” அவர்கள் அனைவரும், “ஆம், நாங்கள் சாட்சியமளிக்கின்றோம்” என்று கூறினார்கள். இதன்படி மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில், “இதனைப் பற்றி நாங்கள் அறியாதிருந்தோம்,” என்று நீங்கள் கூறிட இயலாது.
[7:174] தங்களை* மீட்டுக் கொள்வதை மனிதர்களு க்குச் சாத்தியமாக்குவதற்காக இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.