குர்ஆன் 7:174 — ஆன்மா தூய்மையடையும் இடம்
தங்களை* மீட்டுக் கொள்வதை மனிதர்களு க்குச் சாத்தியமாக்குவதற்காக இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.
[7:173] அன்றியும், “எங்களுடைய மூதாதையர்கள் தான் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள், மேலும் நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளை மட்டுமே பின்பற்றினோம். மற்றவர்கள் புகுத்திய புதுமைகளுக்காக நீர் எங்களைத் தண்டிப் பீரா?” என்றும் நீங்கள் கூற இயலாது.
[7:175] நம்முடைய சான்றுகள் வழங்கப்பட்டு, ஆனால் அவற்றைப் புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுத் துக் கொண்ட ஒருவனைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு ஓதிக்காட்டுவீராக. அதன் விளைவாக, அவன் வழிகேடனாக ஆகும் வரை, சாத்தான் அவனைத் துரத்தி சென்றான்.