Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:175 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நம்முடைய சான்றுகள் வழங்கப்பட்டு, ஆனால் அவற்றைப் புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுத் துக் கொண்ட ஒருவனைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு ஓதிக்காட்டுவீராக. அதன் விளைவாக, அவன் வழிகேடனாக ஆகும் வரை, சாத்தான் அவனைத் துரத்தி சென்றான்.

[7:174] தங்களை* மீட்டுக் கொள்வதை மனிதர்களு க்குச் சாத்தியமாக்குவதற்காக இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விவரிக்கின்றோம்.

[7:176] நாம் நாடியிருந்தால், அதன்மூலம் அவனை நாம் உயர்த்தியிருக்க இயலும், ஆனால் அவனோ பூமியுடன் ஒட்டிக் கொள்வதில் உறுதியோடி ருந்தான், மேலும் தனது சுய அபிப்பிராயங் களையே தொடர்ந்து சென்றான். இவ்விதமாக, அவன் ஒரு நாயைப் போன்றவன்; நீர் அதன்மீது செல்லம் காட்டினாலும் அல்லது அதனைத் திட்டினாலும், அது பெருமூச்சு விடுகின்றது. நம்முடைய சான்றுகளை ஏற்க மறுக்கும் மக்களின் உதாரணம் இத்தகையதாகும். அவர்கள் சிந்திக்கும் பொருட்டு, இவ்விவரங்களை விவரித்துக் கூறுவீராக.