Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:180 — ஆன்மா தூய்மையடையும் இடம்

மிக அழகிய பெயர்கள் கடவுள் -க்கு உரியன; அவற்றைக் கொண்டு அவரை அழையுங்கள், மேலும் அவருடைய பெயர்களைச் சிதைப்பவர் களைப் புறக்கணியுங்கள். அவர்களுடைய பாவங்களுக்காக அவர்கள் பழிதீர்க்கப் படுவார்கள்.

[7:179] ஜின்களிலும் மனிதர்களிலும் அநேகரை நாம் நரகத்திற்கென ஒப்படைத்து விட்டோம். அவர்களிடம் உள்ள அறிவு அதனைக் கொண்டு அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், கண்கள் அதனைக் கொண்டு அவர்கள் பார்க்கமாட்டார்கள், மேலும் காதுகள் அதனைக் கொண்டு அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள் ; அல்ல, அதை விட மிகவும் மோசமானவர்கள்- அவர்கள் முற்றிலும் அறிவில்லாதவர்கள்.

[7:181] நம்முடைய படைப்பினங்களில், சத்தியத்தைக் கொண்டு வழிநடத்துவோர் உள்ளனர், மேலும் அச்சத்தியம் அவர்களை நன்னெறியுடையவர் களாக ஆக்குகின்றது.