Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:186 — ஆன்மா தூய்மையடையும் இடம்

கடவுள் எவரை வழிகேட்டில் விட்டு விடுகின்றாரோ, அவரை வழிநடத்த எவர் ஒருவருக்கும் வழியில்லை. அவர் அவர்களின் பாவங்களிலேயே அவர்களை மூடத்தனமான தவறுகள் செய்யும்படி விட்டு விடுகின்றார்.

[7:185] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும் இன்னும் கடவுள் படைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் அவர்கள் காணவில்லையா? அவர்களுடைய வாழ்வின் முடிவு அருகில் இருக்கக்கூடும் என்று அவர்களுக்கு எப்பொழு தாவது தோன்றுகின்றதா? இதைத் தவிர அவர்கள் எந்த ‘ஹதீஸில்‘ நம்பிக்கை கொள் வார்கள்?

[7:187] (அவ்வேளை)* உலக முடிவினைக் குறித்தும், மேலும் அது எப்பொழுது நிகழும் என்றும் அவர் கள் உம்மிடம் கேட்கின்றார்கள். “அதைப் பற்றிய அறிவு என்னுடைய இரட்சகரிடத்தில் தான் உள்ளது. அவர் மட்டுமே அதன் நேரத்தை* வெளிப்படுத்துவார். வானங்கள் மற்றும் பூமியில் அது மிகப் பளுவானது, திடீரென்றே** தவிர அது உங்களிடத்தில் வந்தடையாது” என்று கூறுவீராக. அதனுடைய கட்டுப்பாடு உம்மிடத்தில் இருப்பதைப் போல அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் உள்ளது,” என்று கூறுவீராக, ஆயினும் மக்களில் பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்வதில்லை.