Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:188 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“எனக்கே நன்மை செய்து கொள்ளவோ, அல்லது எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, என்னிடத்தில் எந்த சக்தியும் இல்லை. கடவுள் என்ன நாடுகின்றாரோ அதுவே எனக்கு நிகழும். எதிர்காலத்தை நான் அறிந்திருந்தால், நான் என்னுடைய செல்வத்தைப் பெருக்கியி ருப்பேன், மேலும் எந்தத் தீங்கும் என்னைத் தீண்டியிராது. நான் ஓர் எச்சரிப்பவரும், மேலும் நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டவருமே தவிர வேறில்லை” என்று கூறுவீராக.

[7:187] (அவ்வேளை)* உலக முடிவினைக் குறித்தும், மேலும் அது எப்பொழுது நிகழும் என்றும் அவர் கள் உம்மிடம் கேட்கின்றார்கள். “அதைப் பற்றிய அறிவு என்னுடைய இரட்சகரிடத்தில் தான் உள்ளது. அவர் மட்டுமே அதன் நேரத்தை* வெளிப்படுத்துவார். வானங்கள் மற்றும் பூமியில் அது மிகப் பளுவானது, திடீரென்றே** தவிர அது உங்களிடத்தில் வந்தடையாது” என்று கூறுவீராக. அதனுடைய கட்டுப்பாடு உம்மிடத்தில் இருப்பதைப் போல அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் உள்ளது,” என்று கூறுவீராக, ஆயினும் மக்களில் பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்வதில்லை.

[7:189] அவர் உங்களை ஒரே நபரிலிருந்து (ஆதாம்) படைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துணையை அவளுடன் அமைதி காணுவதற்காக தருகின்றார். பிறகு அவள் அரிதாகவே அறிந்து கொள்ளக் கூடிய ஒரு மெலிதான சுமையினை அவள் சுமக்கின்றாள். அந்த சுமைகனமானவுடன் அவர்கள் தங்கள் இரட்சகராகிய கடவுள்- இடம் “நீர் எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தருவீரானால், நாங்கள் நன்றி செலுத்துபவர் களாக இருப்போம் ” என்று இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றார்கள்.