Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:189 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர் உங்களை ஒரே நபரிலிருந்து (ஆதாம்) படைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துணையை அவளுடன் அமைதி காணுவதற்காக தருகின்றார். பிறகு அவள் அரிதாகவே அறிந்து கொள்ளக் கூடிய ஒரு மெலிதான சுமையினை அவள் சுமக்கின்றாள். அந்த சுமைகனமானவுடன் அவர்கள் தங்கள் இரட்சகராகிய கடவுள்- இடம் “நீர் எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தருவீரானால், நாங்கள் நன்றி செலுத்துபவர் களாக இருப்போம் ” என்று இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றார்கள்.

[7:188] “எனக்கே நன்மை செய்து கொள்ளவோ, அல்லது எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, என்னிடத்தில் எந்த சக்தியும் இல்லை. கடவுள் என்ன நாடுகின்றாரோ அதுவே எனக்கு நிகழும். எதிர்காலத்தை நான் அறிந்திருந்தால், நான் என்னுடைய செல்வத்தைப் பெருக்கியி ருப்பேன், மேலும் எந்தத் தீங்கும் என்னைத் தீண்டியிராது. நான் ஓர் எச்சரிப்பவரும், மேலும் நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டவருமே தவிர வேறில்லை” என்று கூறுவீராக.

[7:190] ஆனால் அவர்களுக்கு அவர் நல்லதொரு குழந்தையினைத் தரும்போது, அவர்கள் அவரு டைய அப்பரிசை அவருக்கு போட்டியான ஒரு இணைத் தெய்வமாக ஆக்கிவிடுகின்றார்கள். கடவுள் எந்த ஒரு பங்காளிகள் கொள்வதை விட்டும், மிக உயர்ந்தவராக உள்ளார்.