குர்ஆன் 7:190 — ஆன்மா தூய்மையடையும் இடம்
ஆனால் அவர்களுக்கு அவர் நல்லதொரு குழந்தையினைத் தரும்போது, அவர்கள் அவரு டைய அப்பரிசை அவருக்கு போட்டியான ஒரு இணைத் தெய்வமாக ஆக்கிவிடுகின்றார்கள். கடவுள் எந்த ஒரு பங்காளிகள் கொள்வதை விட்டும், மிக உயர்ந்தவராக உள்ளார்.
[7:189] அவர் உங்களை ஒரே நபரிலிருந்து (ஆதாம்) படைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துணையை அவளுடன் அமைதி காணுவதற்காக தருகின்றார். பிறகு அவள் அரிதாகவே அறிந்து கொள்ளக் கூடிய ஒரு மெலிதான சுமையினை அவள் சுமக்கின்றாள். அந்த சுமைகனமானவுடன் அவர்கள் தங்கள் இரட்சகராகிய கடவுள்- இடம் “நீர் எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தருவீரானால், நாங்கள் நன்றி செலுத்துபவர் களாக இருப்போம் ” என்று இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றார்கள்.
[7:191] எந்த ஒன்றையும் படைத்திராத, மேலும் அவைகளே படைக்கப்பட்டவைகளாயிருக்கின்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர் என்பது உண்மையல்லவா?