Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:27 — ஆன்மா தூய்மையடையும் இடம்

ஆதாமின் சந்ததியினரே, சுவனத்திலிருந்து உங்கள் பெற்றோர் வெளியேறுவதற்கும், மேலும் அவர்களின் உடம்புகளை வெளிப்படுத்துவதற்காக அவர்களுடைய ஆடைகளை நீக்குவதற்கும் சாத்தான் காரணமாக இருந்தபோது அவன் செய்ததைப் போல் உங்களை ஏமாற்றும்படி அவனை விட்டுவிடாதீர்கள். அவர்களை நீங்கள் பார்க்காத அதே சமயம், அவனும், அவனது வம்சத்தாரும் உங்களைப் பார்க்கின்றனர். நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்களுக்குத் தோழர்களாக சாத்தான்களை நாம் நியமிக்கின்றோம்.

[7:26] “ஆதாமின் சந்ததியினரே, உங்களுடைய உடம் புகளை மூடுவதற்காகவும், வசதிக்காகவும் நாம் ஆடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால் ஆடைகளில் சிறந்தது நன்னெறியின் ஆடையே ஆகும். அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இவை கடவுள்-ன் சில அத்தாட்சி களாகும்.

[7:28] அவர்கள் ஒரு பெரும்பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர், “ இதனை நாங்கள் எங்களுடைய பெற்றோர் செய்யக்கண்டோம், மேலும் இதனைச் செய்யுமாறு கடவுள் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்,” என்று கூறுகின்றனர். “கடவுள் ஒருபோதும் பாவத்தை ஆதரிக்கமாட்டார். கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாததை நீங்கள் கூறுகின்றீர் களா?” என்று கூறுவீராக.