குர்ஆன் 7:3 — ஆன்மா தூய்மையடையும் இடம்
உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையே நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்; அவருடன் எந்த இணைத் தெய்வங்களையும் பின்பற்ற வேண்டாம். அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[7:2] இவ்வேதம் உமக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது- உம்முடைய இதயத்தில் இது பற்றிய சந்தேகத்திற்கு நீர் இடமளிக்க வேண்டாம் - இதனைக் கொண்டு நீர் எச்சரிக்கை செய்யும் பொருட்டும், மேலும் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நினைவூட்டல் வழங்கும் பொருட்டும்.
[7:4] பல சமூகத்தை நாம் அழித்தோம், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்திலோ அல்லது முற்றிலும் விழித்திருந்த நேரத்திலோ, அவர்கள் நம்முடைய தண்டனைக்கு உள்ளானார்கள்.