Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:30 — ஆன்மா தூய்மையடையும் இடம்

சிலரை அவர் வழிநடத்தினார்,அதேசமயம் மற்றவர்கள் வழிதவறும்படி விட்டுவிடப்படு கின்றனர். அவர்கள் கடவுள்-க்கு பதிலாக, சாத்தான்களைத் தங்கள் எஜமானர்களாக எடுத்துக் கொண்டனர், இருப்பினும் தாங்கள் வழிநடத்தப்பட்டதாகவே அவர்கள் நம்புகின்றனர்.

[7:29] “என் இரட்சகர் நீதத்தையும், மேலும் ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும் அவருக்கு மட்டும் அர்ப்பணித்தவர்களாக நிற்பதையுமே ஆதரிக் கின்றார். நீங்கள் உங்களுடைய வழிபாட்டைப் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும். உங்களை அவர் துவக்கிய வண்ணமே, நீங்கள் இறுதியில் அவரிடம் திரும்பிச் செல்வீர்கள்” என்று கூறுவீராக.

[7:31] ஆதாமின் சந்ததியினரே, நீங்கள் மஸ்ஜிதிற்குச் செல்லும்போது தூய்மையாகவும், மேலும் நன்றாக உடையணிந்தும் இருக்க வேண்டும். மேலும் அளவோடு உண்ணுங்கள் மற்றும் பருகுங்கள்; கண்டிப்பாக, அவர் பெருந்தீனிக்காரர்களை நேசிப்பதில்லை.